
உத்தியோகமும், சம்பளமும் போயேபோச்சு..(It’s gone)..
உத்தியோகமும், சம்பளமும் போயேபோச்சு..(It’s gone)..எங்கே நமது வலைப்பதிவர் கையேடு? உடனே தேடி எடுக்கவேண்டும்…………..
கையில் வெறும் ரூபாய் 3000/- மட்டுமே மிச்சமிருந்தது. வேலை செய்த நிறுவனத்தை மூடிவிட்டார்கள், உத்தியோகமும் இல்லை, சம்பளமும் இல்லை (It’s gone)போயேபோச்சு…… மாதாமாதம் செலவு செய்யவேண்டிய 5-ம் தேதி வருவதற்கு இன்னும் 20 நாட்கள் மட்டுமே மீதமிருக்கிறது, வழக்கமாக ஒவ்வொரு மாத வீட்டுச் செலவு, வாடகை செலவு உட்பட குறைந்தபட்சம் ருபாய் 25,000/- தேவை. …. எப்படி? எங்கிருந்து பணம் புரட்டுவது?…. என்கிற மனக்குழப்பத்துடன் வீட்டிற்குள் நுழைந்தேன்…….. மனக்குழப்பம் என்றாலே எனக்கு இந்தப் பாடல் ஞபகம் வரும். ” மயக்கமா… கலக்கமா… மனதிலே குழப்பமா… வாழ்க்கையில் நடுக்கமா?”
நான் வீட்டின் உள்ளே வருவதைப் பார்த்த என் மனைவி எனக்கு மேலும் எரிச்சலூட்டும் வகையில் குழந்தைகளிடம்…… “அப்பா ஆபிசிலிருந்து வந்தாச்சு… அப்பாகிட்ட … ‘வீடு வாங்கப் போகலாம் வாங்க’ என்று கூறுங்கள்….. அப்போதுதான் குழந்தைகள் நச்சரிப்பு தாங்காமல், வங்கிக் கடனாவது வாங்கி, சொந்தமாக ஒரு வீடு வாங்குவார்… இந்த வாடகை வீட்டுத் தொல்லை தாங்கமுடியவில்லை” என குழந்தைகளை தூதுவிட்டுக்கொண்டிருந்தார்….. எங்கோ வானொலியில் இந்தப் பாடல் வழிந்தோடியது,…. பாடல் :- “தள்ளுமடல் வண்டி இது தள்ளிவிடுங்க, எண்ணெய் விலை ஏறிபோச்சு மாட்டைப் பூட்டுங்க… போற இடம் எங்கப்பா? போனப்புறம் சொல்றேம்ப்பா?” …
சட்டேன்று குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை வந்தது…. எங்கே அவர்களுக்கும் இப்படி என்னைப்போல வேலை செய்யும் நிறுவனம் மூடுவிழா கண்டு, என்ன செய்வது என்று, கையை பிசைந்துக்கொண்டு…திக்குத்தெரியாமல் நிற்கவேண்டுமா? ஆகவே குழந்தைகள் இருவருக்கும் எனக்கு ஏற்ப்பட்ட இக்கட்டான, இப்படிப்பட்ட பிற நிறுவனங்களில் வேலை வாய்ப்பை சார்ந்து தனது வாழ்க்கையை அமைத்துக்கொள்ளாமல்… அவர்கள் தனது சொந்தக்காலில் நிருக்கும்படி ஒரு நல்ல சுய தொழிற் பயிற்சிக் கல்வி அறிவைத் தரும் பாடப் பிரிவில் சேர்த்து படிக்கவைக்கவேண்டும்… என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டேன்….. அடுத்த மாதம் 15ம் தேதிக்குள் பசங்க இருவருக்கும் காலாண்டுக்கான பள்ளிக்கூட கட்டணம் வேறு கட்டவேண்டியிருந்தது. இந்த நிலையில்தான் ஏதோ இழுத்துப் பிடித்து ஓடிக்கொண்டிருந்த அந்த நிறுவனம், மேலும் தாக்குப்பிடிக்கமுடியாமல் கடன் கொடுத்த வங்கி நிறுவனமே, நான் பணியாற்றிக்கொண்டிருந்த எனது நிறுவனத்திற்கு மூடு விழா செய்தது. நீதிமன்றம் முடிய கதவின் பூட்டிற்கு அரக்கு சீல்வைத்தாலும், வேலையை விடமாட்டேன் என சிலர் பூட்டிய கதவின் அருகேயே காத்துக்கிடந்து….தினமும் வருகைப் பதிவேடு பதிவு செய்துக் கொண்டிருந்தார்கள்……………….. பக்கத்து டி கடையின் வானொலியில் இந்தப் பாடல் ஒலித்தது – “மாடி மேலே மாடி கட்டி…கோடி கோடி சேர்த்து விட்ட சீமானே… ஹலோ ஹலோ கமான் கமவுட்.. சீமானே… விஸ்வநாதன் வேலை வேணும்….”
பொதுவாக மனைவியிடம் வீட்டிற்குள் வந்ததுமே மனதில் உள்ள எல்லா கஷ்டங்களையும் கொட்டித் தீர்க்கக் கூடாது. அப்படிச் செய்வதால் சிலநேரம் நமக்கு மனபாரம் குறையலாம்… ஆனால் பல நேரங்களில் நமது மனபாரம் இரட்டிப்பகிவிடும். காரணம் மனைவியின் பங்குக்கு அவரும் சேர்ந்து….”என்னங்க இப்படி ஒரு குண்டைத் தூக்கி போடுறீங்க!!!!! உங்களுக்கு கொஞ்சம் கூட பொறுப்பில்லை????, அடுத்தவேளை சாப்பாட்டுக்கு என்னசெய்வது????, கொஞ்சமாவது யோசித்துப்பார்த்தீர்களா????..”… இப்படி இன்னும் பல கொக்கியை ???? நம் மனதில் மாட்டிவிட்டு, அதைப்பிடுத்துக்கொண்டு தொங்குவார்….. ஆகவே அமைதியாக உடுப்புக்களை மாற்றிக்கொண்டு,.. குளியலறைக்கு சென்று கை,கால் கழுவி முகம் துடைத்தபடி…..நிதானமாக உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு…….. இரவு படுக்கைக்கு செல்லும்போது பேசலாம் என்று முடிவுசெய்துகொண்டு … இரவுநேரம் வானொலி கேட்க எனது கைத் தொலைப்பேசியில் பண்பலை அலைவரிசையில் தொட … சட்டேன்று இந்தப்பாடல் ஒலித்தது “அடுத்தாத்து அம்புஜத்தைப் பார்த்தேளா அவ த்துக் காரர் சொல்லுறத கேட்டேளா அடிச்சாலும் புடிச்சாலும் அவா ஒண்ணாச் சேர்ந்துக்கறா… ஆனா அடிச்சதுக்கொண்ணு புடிச்சதுக்கொண்ணு புடவையா வாங்கிக்கறா, பட்டுப் புடவையா வாங்கிக்கறா”…….
அனைத்து சமையலறை வேலைகளை முடித்துக்கொண்டு படுக்கையறைக்குள் நுழைந்த மனைவி மெல்ல பேச ஆரம்பித்தாள்…”என்னங்க ஆச்சு எதுவும் பேசாம, எதோ ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதுபோல”… என்றாள். விவரம் சொன்னதும் … இதமாக என் மனதிற்குள் பல கொக்கியை ???? மாட்டித் தொங்கினாள்…… மனம் கனமாகி தானாக அதன் (மைண்ட் வாய்சில்) உல் மனதுக்குள் பாடல் ஒலித்தது …. “நிலைமாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில் வாழும் மனித ஜாதி -அதில் வாழ்வதில்லை நீதி…….”
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் சில விசயங்களை நின்று நிதானமாக அசைபோட வேண்டியிருக்கிறது….. எப்படி சம்பாதிக்கின்ற ஆண்களுக்கு அலுவலகப் பிரச்சனைகளோ, அதேபோலவே வீட்டை நிர்வகிக்கும் மனைவிக்கும் பல அன்றாட வீட்டுப் பிரச்சனைகளை எதிர்நோக்கவேண்டியுள்ளது. பல இல்லத்தரசிகள் பிரச்சனைகளை நிதானமாக எதிர்கொள்ளாமல் தானும் பயந்து தனது கணவணனின் பதற்றத்தை பெரிதாக்கிவிடுகிரார்கள். அதனால் தான் பல கணவன்மார்கள் தமது மனைவியிடம் பிரச்சனைகளை வெளிப்படையாக பேசித் தீர்த்துக்கொல்வதில்லை. பொதுவாகவே அனைத்துத் திருமணமான மேலான கணவன்மார்களின் மனதில் அவர்களின் மனைவிக்கென்று தனி மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பார்கள். இருந்தும் இப்படித்தான் பொய்க்கோபம் கொண்டு…. ஊடல்… கூடல் எல்லாம் இருந்தால்தான் அது சிறந்த இல்லறவாழ்க்கையாக இருக்கும்….. அதாவது “இதெல்லாம் வாழ்க்கையில் சகஜமப்பா” என்று பிரச்சனைகளை எளிமைப்படுத்த தெரிந்து வைத்திருக்கவேண்டும்….. அதைவிடுத்து எதிரும் புதிருமாக சண்டைப்போட்டால் வாழ்க்கை வண்டி எப்படி ஓடும்……. கவியரசரின் கூற்றைப்போல சரியான நேரம்பார்த்து வானொலியில் மிதந்து வந்த அந்தப் பாடல் :- “நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவும் வானும் போலே, நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே, என்னுள்ளம் எனைப்பார்த்து கேலி செய்யும் போது, இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதி ஏது, இது கணவன் சொன்னது இதில் அர்த்தம் உள்ளது…. பரம சிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சவுக்கியமா?”
எப்போது தூங்கினேன் எனத் தெரியவில்லை… விழித்தெழுந்தபோது குழந்தைகள் பள்ளிக்கூடம் சென்றுவிட்டனர்… மனைவி சமயலறையில் எதோ செய்துகொண்டிருந்தாள்….. வழக்கம் போல பல்தேய்த்து…காப்பிகுடித்து …….. “எதையாவது செய்” என்று மனது துடித்துக்கொண்டிருந்தது, என்ன ஆகுமோ என்கிற பயம்தான் மனிதனை எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கிறது என்பதை நினைத்தபோது… பள்ளிப் பருவத்தில் எனது ஆசிரியர் கூறியது ஞபகம் வந்தது….மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு பயம் என்பது துளிகூட கிடையாது என்பதை சில வீர வரிகளில் எடுத்துக்கூறினார்… “எங்கே நமது தலை வேட்டப்பட்டுவிடுமோ என்பதுதான் பயத்தின் உச்சகட்டம், அப்படி வெட்டப்ப்படும்வரை நீ எதற்கும் பயப்படவேண்டியதில்லை…. அப்படியே வேட்டுபட்டாலும் அதன் பிறகு நீ அங்கு இருக்கப்போவதில்லை….ஆகவே எதற்க்காக பயப்படவேண்டும்”…… “மரணத்தைப் பற்றி கவலைப்படாதே. நீ இருக்கும் வரை அது வரப்போவதில்லை. அது வரும்போது நீ இருக்கப்போவதில்லை. பிறகு எதற்கு அந்தக் கவலை?” என்று ஒரு வீர பாடம் ஒன்றை சொன்னது இன்னமும் என் நினைவுகளில் ஓடிக்கொண்டிருந்தது… “மனநிறைவு என்பது இயற்கையாக நம்மிடம் உள்ள செல்வம்…… ஆடம்பரம் என்பது நாம் தேடிக்கொள்ளும் வறுமை”, “அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே!”… என்கிற, இது போன்ற பல வாக்கியங்கள் நமது மூலைக்கு, காச்சிய இரும்பை சமட்டியால் அடித்து வளைத்து உறுதிப்படுத்தும் வார்த்தைகள். நீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால் உங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள்! உங்கள் கண்ணீர், உங்கள் முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும்!…….. உங்களின் கண்கள் கண்ணீரால் உங்களை காட்டிக்கொடுத்தாலும், உங்களின் அழகிய புன்னகையை உதிர்த்து அதை எதிர்கொள்ளுங்கள்!…. ஆகவே கவலைப்பட்டு ஒன்றும் ஆகப்போவதில்லை என்று கவலைப்படுவதை விடுத்து அடுத்து என்ன செய்யவேண்டும் என காரியத்தில் கண்ணாக இருக்க கணினியை நோக்கி ஓடினேன்….. மடிக்கணினியை திறந்து இணையத்தில் இணைந்து…. முதலில் வேலைதேட மனசு நினைத்தாலும் எனது கை அந்தக் குறிப்பிட்ட இனைய பக்கத்தை சொடுக்கியது, மெல்ல அந்த இனைய முகப்புப் பக்கத்திற்கு வந்தேன்……இனைய வானொலியில் பாடலைக்கேட்க மனம் விரும்பியதால்…. பாடலைக் கேட்டபடி கணினியில் எனது பணியைத் தொடர்ந்தேன் …..பாடல்:- “வாழும் வரை போராடு வழியுண்டு என்றே பாடு இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே!”……..
….அந்த இணையதள நிறுவனத்தை தொடர்பு கொள்ள முகவரியை தேடி….. தொலைபேசியில் அழைத்துப் பேசினேன். ரூபாய் 15000/- ஆகும் என்றார்கள், தொடர்ந்து பேசியதில் இறுதியில் ருபாய் 2000/- வெறும் 3 பக்கங்களில் பிறகு ஒவ்வொரு மாதமும் ருபாய் 5000/- கட்டணம் என்று பேசி முடிவானது… நேரில் வருவதாகக் கூறி… மடிக் கணினியைக் கூட மூடாமல் சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பினேன். …..”ஏங்க.. ஏதாவது கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு வெளியில் செல்லுங்கள்”… என்று என் மனைவி கூறியது காதில் விழுந்தும், விழாததுபோல….. வேகமாக வீட்டைவிட்டு வெளியில்வந்து… வாகனம் பொருந்தி….அடுத்த அரைமணியில் அவர்களின் அலுவலகத்தில் இருந்தேன். வழியில் வாகனத்தில் செல்லும்போதும் பண்பலை வானொலி நிகழ்ச்சியில் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது …. “சென்று வா மகனே ! சென்றுவா ! – அறிவை…வென்று வா மகனே ! வென்று வா !….அறிவுலகம் உன்னை அழைக்கின்றது – ஏதும் அறியாதவன் என்றே நினைக்கின்றது…..”
மனதிற்குள் ஒரு ஆர்வம் வந்துவிட்டால், கால நேரம் கடந்து, எத்தனை உயரமானாலும் எட்டிப்பிடிக்கும் சக்தி கிடைத்துவிடுகிறது. அதனால்தான் கஷ்டப்பட்டு உழைக்காமல் இஷ்டப்பட்டு உழைத்தால் கிடைக்கும் பலனுக்கு ஈடு இணை இல்லை என்பதை அதன் அனுபவத்தால் மட்டுமே உணரமுடிகிறது. பலநாட்களாக இணையத்தில் எனது எண்ணங்களை விதைத்து அறுவடை செய்து காட்டவேண்டும் என்கிற அந்த எண்ணம் மனதில் ஓடிக்கொண்டிருந்ததால், இணையத்தில் ஒரு பெரிய வாய்ப்பை உருவாகவேண்டும் என பல விவரங்களை எனது மின்னஞ்சல் பெட்டியில் சேர்த்து வைத்திருந்தேன். (எங்கொ வானொலியில் ஒலித்துக்கொண்டிருந்த அந்தப் பாடல் எனது காதுகளில் நுழைந்தது :- ஒரு முத்தாரத்தில் முப்பது முத்து சேர்த்து வைத்திருந்தேன் அதன் முன்னும் பின்னும் தங்கக் கோடுகள் போட்டு வைத்திருந்தேன்…..).
கையில் இருந்த ருபாய் மூவாயிரத்தில் ருபாய் 2000/- கட்டணமாக செலுத்தி, இணையத்தில் தேவையான பதிவு முறைகளை முடித்து, என்னுடைய சொந்த இனைய பக்கத்தை வடிவமைத்தேன். அதன் முகப்புப் பக்கத்தில்…முன்பே நான் உருவாக்கி வைத்திருந்த எனது கூகள் விளம்பர (கூகள் ஆட்சென்ஸ்-Google Adsense) கணக்கை இணைத்தேன். மேலும் (Paypal) பே-பால் மற்றும் (E-Commerce & On line Payment Gate Way) என்கிற வங்கியின் இனைய வழிப் பணப் பரிவர்த்தனைகளுக்கான H.T.M.L என்கிற கணினி மென்பொருள். (Click)சொடுக்கு (Button)பொத்தான்களை நிறுவி எனது இணையப்பக்கம் தயாரானது. வெற்றி பெற்ற பெருமிதம்… கைகளுக்கு நன்றி சொன்னேன்…. இந்தக் கைகள் என்னவெல்லாம் ஜாலம் செய்கிறது…. அதை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்து, நமது வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கிறது… இப்படி மனம் நினைத்துக்கொண்டிருக்கையில் வானொலியில் இந்தப் பாடல் ஒலித்தது….. “உழைக்கும் கைகளே,…. உருவாக்கும் கைகளே,… உலகை புது முறையில்,…. உண்டாக்கும் கைகளே…. உண்டாக்கும் கைகாளே (உழைக்கும்)”
இப்படித்தான் சில வேளைகளில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளும்போது, நேரம் போனது தெரியவில்லை. தொலைப்பெசியைப் பார்த்தபோது, தொலைபேசி மனியாடிக்காமல் ஓசை குறைக்கப்பட்டு இருந்ததால் அதில் வீட்டிலிருந்து பல அழைப்புக்கள் வந்திருந்தது தெரிந்து, உடனே வீட்டிற்கு தொடர்புகொண்டு பேசியபோது…. என் மனைவி சற்று கலவரப்பட்டு…. வேலை போய்விட்டதால் கணவருக்கு என்ன கோபமோ?, எங்கு போனாரோ?…. என மறு முனையில் அழாதகுறையாக….. “என்ன ஆச்சுங்க?? எங்கே இருக்கீங்க???” என்று என் மனம் நிறைய கொக்கியை ???மாட்டினார்……… ஏம்ப்பா கோகி- ரேடியோ மார்கோனி… சூழ்நிலைக்குத் தகுந்த ஒரு பாட்டைப் போடுப்பா ….” நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே….நீங்கிடாத துன்பம் பெருகுதே” ….. :(திரு. ஜி. ராமநாதன் அவரோட இசையப்பில் வந்த அழகான பாடல் இது… படம் -சதாரம்) …
அடித்துப் பிடித்து…ஓடோடி வீட்டிற்கு வந்ததும் மனைவியிடம் மகிழ்ச்சியான செய்தியை சொன்னதும் ” நீங்க ரொம்ப மோசமான ஆளுங்க, உங்களைக் காணும் என்று எவ்வளவு பயந்துவிட்டேன் தெரியுமா?…” என்று கண்களில் நீர் தளும்ப என் கைகளை ஆறுதலாக பிடித்து… அவளது நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள்….. எத்தனை வயதானால் என்ன தினம் தினம் கணவன் மனைவி இருவரும் புதிதாக திருமணமான தம்பதிகள் போல…. பிறகென்ன வானொலியில் பாட்டுதான்….. வீட்டுக்கு வீடு வாசப்படி என்கிற படத்தில் ” ஆடல் பாடல் காதல் என்பது அப்போது….. ஊடல் கொண்டு காதல் செய்வது இப்போது…… நாளை வருவது கல்யாணம், இன்று வெள்ளோட்டம்….இந்த கொண்டாட்டம் எப்போதும் உண்டாகட்டும்….. https://youtu.be/3TLmnL2QQqU
“என்னால் நம்பமுடியவில்லை… இத்தனை வேகமாக ஆரம்பித்த முதல் வாரத்திலேயே எனது வங்கிக் கணக்கிற்கு ருபாய் 50,500/- கிடைத்திருப்பது குறித்து பெருமையாக இருந்தது.. எதோ சொல்லுவார்களே “வயறு காய்ந்த மாடு கம்பங் கொல்லையில புகுந்த மாதிரி”…. என்பதுபோல மனம் பரபரப்பானது…. பெருமையை ஊர் அறிய தெரியப்படுத்த மனம் உணர்சிவசப்படலானது … அடுத்தது …. அனைவருக்கும் தெரியப்படுத்த…. எங்கே நமது வலைப்பதிவர் கையேடு?….. உடனே தேடி எடுக்கவேண்டும்…….என்னைவிட என் மனம் ஒரே நேரத்தில் என்வீட்டின் வெவ்வேறு இரண்டு அறைகளில் என் நினைவுகளை, விரட்டித் தேடியது……வழக்கம்போல வானொலியில் பாடல் ஒலித்தது… “சத்தியம்…. இது சத்தியம்…. எல்லாம் வல்ல இறைவனின் ஆணை, சொல்லப் போவது யாவையும் உண்மை, சத்தியம்… இது சத்தியம்“………
அடுத்தது….. நமது வலைப்பதிவர்கள் கையேட்டில் இருக்கும் அனைவருக்கும் என்னுடைய இனைய முகவரியை தந்து, …… நீங்களும் கைநிறைய சம்பாதிக்க வேண்டுமா? பலருக்கும் பொருலீட்டித்தரும் வகையில் அமைக்கப்பட்ட எனது இணையப்பக்கம்… கைநிறைய அள்ள அள்ள குறையாத ஒரு அட்சயப் பாத்திரம் என்பதை தெரியப்படுத்தி நானும் பயன்பெறவேண்டும் என்பதால்….. அதற்காக அனைவருக்கும் மின்னஞ்சல் அனுப்பும் வேலையை தொடங்கினேன்….இனைய வானொலியில் நேயர் விருப்பம் நிகழ்ச்சியில் பாடல் ஒலித்தது “நான் அனுப்புவது கடிதம் அல்ல,…. “உள்ளம்”…. அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல ….”எண்ணம்”… உங்கள் உள்ளமதைக் கொள்ளை கொள்ள…… நான் அனுப்புவது கடிதம் அல்ல”…..
எனது இணையபக்கத்தின் மூலம் எப்படி பணம் சம்பாதிப்பது என்று பார்ப்போம். முதலில் நீங்கள் செய்யவேண்டியதெல்லாம், என்னுடைய இணையதளத்திற்குள் நுழைந்ததும், முகப்புப் பகுதியிலிருக்கும், “புது கணக்கு தொடங்க” என்கிற பொத்தானை (கிளிக்)/சொடுக்கியபிறகு தோன்றும் விண்ணப்ப படிவத்தில் உங்களைப்பற்றிய விவரங்களை குறிப்பிட்டு உங்களுக்கே உரிய உங்கள் கணக்கின் உல் நுழைவதர்க்கான் “பெயர்” மற்றும் “கடவுச் சொல்” போன்றவற்றை தனியாக குறித்துவைத்துக்கொண்டு, உங்களது பெயரில் ஒரு புதிய கணக்கை தொடங்க வேண்டும்.
மேலும் மிக எளிமையாக உங்களுக்கு புரியுமாறு கூறுகிறேன். அதாவது நீங்கள் எழுதும் கதை, கட்டுரை, கவிதை போன்றவற்றை (Blogspot.com)என்கிற உங்களது இனைய பக்கத்தில் பதிவு செய்துவிட்டு அந்த இனைய பக்கத்தின் URL-முகவரியை என்னுடைய இனைய தளத்தில் உள்ள உங்களது கணக்கின் கீழ் பொருத்திவிட்டால். உங்களது கதை, கட்டுரை, கவிதையை யாராவது படிக்கும்போது திரையில் தோன்றும் விளம்பரங்களுக்கு கிடைக்கும் தொகையில் பாதி உங்களது கணக்கில் சேர்ந்துவிடும். அதாவது எனது இணையதளத்தில் உங்களது கதை படிப்பதினால் கிடைக்கும் விளம்பரப் பணம் ருபாய் 1000/- என்றால் அதில் பாதி ரூபாய் 500/- உங்களுடைய கணக்கிற்கும், மீதி ரூபாய் 500/- என்னுடைய கணக்கிற்கும் வந்து சேரும். ஆகவே உடானடியாக என்னுடைய இணையதளத்தில் உங்களை இணைத்துக்கொண்டு உங்களின் கதை கட்டுரை கவிதைகளுக்கு சிறப்பான ஒரு பெரிய சன்மானத்தைப் பெற, கீழ்கண்ட எனது மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளுங்கள்……”என் கண்களுக்கு பச்சை விளக்கு தெரிந்தது”….. நிச்சயம் இது வெற்றிகரமான செயலாகவும், அனைவரும் மிகுந்த நம்பிக்கையோடு நம்மோடு இணைந்து பயனடைவார்கள் என, என் மனம் எதோ சோதனையில் ஒரு சாதனை செய்ததுபோல நிம்மதியாக…….. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களைப்போல…. மின்சார இருப்புப்பாதையில் புகை வண்டியை ஒட்டிக்கொண்டிருந்தது …..பாடல்:-“ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது….”
“ஏனுங்க….அட உங்களைத்தான் …இன்னைக்கு முக்கியமா எதோ உங்க கம்பெனி மீட்டிங் இருக்குன்னு சொன்னீங்களே…. இப்படியா 7 மணி வரை தூங்குவது… சீக்கிரம் எழுந்து ஆபிசுக்கு கிளம்புங்க”…… என்று எனது மனைவியின் குரல் கேட்டு திடுக்கென்று கனவு களைய, சட்டென்று நினைவுக்கு வர குளியலறை நோக்கி ஓடினேன்…. அருமையான கனவு எப்படியும் ஒரு மணி நேர விளம்பரதாரர் நிகழ்ச்சியாக ஏதாவது ஒரு வானொலிக்கு விற்றுவிடலாம்…….. உடனடியாக இந்த “வானொலிக் கதையும் பாடலும்” நிகழ்ச்சிக்கு சில விளம்பரதாரர்களைத் தேடவேண்டும்…… நீங்களே சொல்லுங்கள்… இந்தக் கதை, விளம்பரதாரர் நிகழ்ச்சிக்கு போனியாகுமா?…… நேயர்களே நீங்களும் கூறுங்கள்….. இந்தக் கதையும் பாடலும் நிகழ்ச்சி உங்களுக்கு பிடித்திருக்கிறதா? ஏதாவது குற்றம் குறை இருந்தால் எவ்வளவோ?…. அவ்வளவு குறைத்துக்கொண்டு மிச்சம் மீதியைத் தந்தாள் போதும்……..மீண்டும் எங்கோ வானொலியில் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது அதைக்கேட்ட குளியறையிலிருந்த எனது மனதும் பாடலை முணுமுணுத்தது :-
“துணிந்து நில்,..ஹ ஹ… தொடர்ந்து செல், ..ஹ ஹ ஹ .தோல்விகிடையாது தம்பி….. உள்ளதை சொல், நல்லதை செய் தெய்வம் இருப்பதை நம்பி”……… ….
விட்டுக் கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும்………
தட்டிக் கொடுங்கள்; தவறுகள் குறையும்……………
மனம் விட்டுப் பேசுங்கள்; அன்பு பெருகும்………..
நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி…….
தற்ப்போது உத்திராகன்ட் மாநிலத் திட்டப் பணிமனையிலிருந்து….
எனது நாட்குறிப்பேட்டின் வாடாமலர்ப் பக்கங்கள்:-1987
“வயோதிகம்” உனக்கென்ன குறைச்சல் நீ ஒரு ராஜா வந்தால் வரட்டும் முதுமை” இந்த வரிகளை கேட்கும்போது தெம்பாகத்தான் இருக்கிறது ஆனால் யதார்த்தம் என்ன? முதியவர்களுக்குரிய தேவைகள் சரிவர நிறைவேற்றப்படுகின்றனவா? இயந்திரமயமாகிய வாழ்க்கை ஓட்டத்தில் இளையவர்கள் சிக்கியதால் முதியவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்களா?உதவியாக இல்லாவிட்டாலும் உபத்திரமாக இருக்காதே…http://youtu.be/vvfLzYCmfug
# 1987என் குறிப்பேட்டின் வாடாமலர் பக்கங்கள்:- நினைத்துப்பார்க்கிறேன்…. நான் படித்த அதே அரசாங்கப் பள்ளியில் பகுதி நேர ஆசிரியராரக பணியாற்றுவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை,(Dr Sir Sarvepalli Radhakrishnan….சர்வபள்ளி, டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் படித்த பள்ளி) எனக்கு பாடம் சொல்லித்தந்த ஆசிரியர்களுடன் சமமாக ஆசிரியர் ஒய்வு அறையில் உட்கார மிகவும் தர்ம சங்கடமான சூழ்நிலை, ஒரு ஆசிரியை, நான் படிக்கும் பொது எனக்கு ஆசிரியையாக இருந்தவர், அவர் என்னை “வாங்க தம்பி சார் உட்காருங்க” என்பார். இதை எல்லாம் விட, வகுப்பில் யார் ஆசிரியர் என தெரியாத அளவில் நானும் மானவனைப்போலவே இருந்தேன். என்னை ஆசிரியர் என தனிமைப்படுத்தி காண்பிப்பதற்காகவே வேஷ்டி உடை அணிந்து செல்லவேண்டியதாக இருந்தது. 1987 இல் மாதம் 300 சம்பளம் பெரும் இந்த பகுதிநேர ஆசிரியற்பணி தேவைதான ? என்கிற அப்பாவின் நியாயமான கேள்விக்கு கிடைத்த பரிசுதான் 1300 சம்பளத்தில் ஒரு பிரபல தனியார் கம்பனியில் வேலையில் சேர்ந்தது…. நான் ஆசிரியர் பணியிலிருந்தபோது அதே பள்ளியில் என்னுடன் பணியாற்றிய பகுதிநேர வணிகவியல் ஆசிரியர் ஒருவரை நினைக்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கும், பகலில் அவரின் மாணவனுக்கு ஆசிரியராகவும், மாலையில் அந்த மாணவனின் கீழ் அவனது தாத்தாவின் மொத்தவியாபாரக் கடையில் பணிபுரியும் கணக்கராக பணியாற்றிய அந்த ஆசிரிய நண்பர், அவரின் அந்த மாணவனால் பெற்ற கஷ்டங்கள் …கொடுமையிலும் கொடுமை ஏழ்மையில் படித்தவர்களுக்கு வேலையில்லா கொடுமை…. அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது அதனினும் ….கொடிது கொடிது இளமையில் வறுமை கொடிது . என்னும் ஔவை வாக்கை நினைத்து வியக்கவைப்பது இந்த பாடல் http://youtu.be/O-zgx1UuvN0
# என் குறிப்பேட்டின் வாடாமலர் பக்கங்கள்:- “குறிப்பாக காரைக்கால் அம்மையார் படம் பார்க்கும் பொது எலும்புக்கூடுகள் நடன காட்சி” …..நான் சிறுவனாக இருந்த பொது அதிகம் பார்த்த திரைப்படம்கள் அனைத்தும் பக்திப்படங்கலாகவே இருந்தது, காரணம் என்னுடைய பாட்டியும் அதே ஊரில் வசித்த அவரின் தங்கை எனக்கு “சின்ன பாட்டி” இருவரும் திரைப்படம் பார்க்க வேண்டும் என்றால் இரவு நேரத்தில் அவர்களின் கைபிடித்து அழைத்துவர துணைக்கு நானும் அவர்களுடன் திரைப்படம் பார்க்க செல்லவேண்டும் என்பதால் நான் பார்த்த படங்கள் திருவருட்செல்வர் , திருவிளையாடல், ஒளவையார், கோமாதா என் குலமாதா, காரைக்கால் அம்மையார்… இப்படி பல பக்திப்படங்கலாகவே இருக்கும், அதில் குறிப்பாக காரைக்கால் அம்மையார் படம் பார்க்கும் பொது எலும்புக்கூடுகள் நடன காட்சி வந்த பொது என் பாட்டி தனது புடவை தலைப்புபகுதியால் என் முகத்தை மூடி “பார்க்காதே பயந்துவிடுவாய்” என்று சொல்லியும் விடாமல் பிடிவாதமாக பார்த்த அந்த காட்சி என்றும் என் நினைவில் இருப்பவை. http://youtu.be/ac4aT3sGO2M
# என் குறிப்பேட்டின் வாடாமலர் பக்கங்கள்;- “ஆடு பாம்பே விளையாடு பாம்பே – அடிபட்ட பாம்பு சார் “….. அப்போது Dec-1989, பல மருத்துவமனைக்கு பஞ்சு வழங்கும் ஒரு பிரபல பஞ்சு தொழிற்ச்சாலை அது, அதன் அதிபரும் என் அப்பாவும் நண்பர்கள் (ஆலையின் அதிபர் அதிகம் படிக்காதவர்- தாத்தாவின் காலம் முதல் வணிக வழியில் குடும்ப நண்பர்) அவரின் பஞ்சு ஆலைக்காக கடன் தந்திருந்த, கடன் நிறுவன அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர்கள் வர இருப்பதால் உதவுமாறு கேட்டுக்கொண்டார். உடல்நிலை சரியில்லாமல் ஓய்வில் இருந்த அப்பாவால், அலைய முடியாமல் இருந்த சமயம் அது, எனக்கு சில அறிவுரைகளை கூறி இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு பஞ்சு ஆலைக்கு சென்று உதவும் படி கேட்டுக்கொண்டார், கடன் பெற்று அதில் ஓடிக்கொண்டிருந்த பஞ்சு ஆலையில், தயாரித்த பொருட்களும் கடனில் விற்கப்பட்டு, தொழிற்ச்சாலையில் மாத சம்பளம் தருவதே மிகவும் கடினமான நிலையில் இருந்தது. இந்த நிலையில்தான் கடன் வழங்கிய நிறுவனத்தின் நேரடி ஆய்வு, அதை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து ஒரு வழியாக தயார்செய்தோம். மறுநாள் ஏற்கனவே முடிவு செய்திருந்தபடி நான்கு வாட்ட சாட்டமான ஆட்களை கையில் தடியுடன், தயாரித்த பொருட்கள் வைக்கும் காலியான இருப்புக் கிடங்கின் (GODOWN) கதவை மூடி அதன் அருகே நிற்க வைத்தோம், மிகப்பெரிய காலியான தொட்டிகளில் தண்ணீரை நிரப்பி மேற்ப்பரப்பில் செய்தித்தாள்களை பரப்பி அதன் மீது சிறிதளவே இருந்த பஞ்சுகளை தூவி வைத்தோம். அதாவது தொட்டி நிறைய தயாரிப்பிற்கான பஞ்சு இருப்பில் (STOCK) உள்ளது என்பதாக காண்பிப்பதற்கு.
குறிப்பிட்ட நேரப்படி இரண்டு கடன் நிறுவன அதிகாரிகள் வந்தபோது, முதலில் (முன்பே சரி செய்யப்பட்ட)இருப்பு (STOCK) புத்தகங்களை சோதனை செய்துவிட்டு , கிடங்கிற்கு சென்று ஆய்வு மேற்கொள்ளவேண்டும் என்றார்கள், அவர்களை அழைத்துக்கொண்டு கிடங்கு (GODOWN) இருக்குமிடம் சென்றோம். ஏற்கனவே பெசிவைதபடி பணியாட்கள் நன்றாகவே நடித்தார்கள் ” சார் கிட்ட வராதீங்க …மிகப்பெரிய நல்ல பாம்பு ஒன்றை அடித்துவிட்டோம் மற்றொன்று தப்பித்து கிடங்கினுள் (GODOWN) நுழைந்துவிட்டது, அடிபட்ட பாம்பு சார் ” என்றார்கள்…. அவ்வளவுதான் ஆய்வுக்கு வந்தவர்கள் “கிடங்கின் உள்ளே என்ன பொருள் உள்ளது என்பதை சொன்னாலே போதும் வெளியில் இருந்தே குறித்துக்கொண்டு சென்றுவிடுகிறோம் என்றார்கள்” பிறகு தொட்டி நிறைய தயாரிப்பதர்க்காக தாயாராக இருந்த பஞ்சு STOCK இருப்புக்களையும் குறித்துக்கொண்டு, பஞ்சு ஆலை சிறப்பாக செயல்படுகிறது என்றுகூறி சென்றனர். அன்று அந்த தொழிற்ச்சாலை தப்பித்துக்கொன்டாலும் பின்னாளில் நேர்ந்த அண்ணன் தம்பி சொத்து தகராறில் ஒரேடியாக மூடுவிழா கண்டது என் மனதிற்கு வருத்தமாக இருந்தது. “அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமா உலகத்திலே…” http://youtu.be/drBTwOv1QWk
“மனநிறைவான வாழ்க்கையை தேடுவதைவிட
வாழும் வாழ்கையில் மனநிறைவை பெற முயற்சித்தேன்.
சிறப்பான வேலை என்பதைவிட
செய்யும் வேலையே சிறப்பாக செய்தேன்
அது வேதனை போன்றதொரு சோதனை என்பது
புரிந்ததும்… தெரிந்தது
மனம் கரைந்ததும்… தெளிந்தது http://www.youtube.com/watch?v=1VKqj92W73k&feature=share&list=PLpg7WQR5RCCztT3u5tcLqjyhktTHC7kPb
தந்தையின் பணியிட மாற்றம் காரணமாக நான் ஒன்றாம் வகுப்பை இரண்டு முறை படித்தேன் (இரண்டு ஆண்டுகள்) காரணம் ஆங்கிலப்பள்ளியில் (KG +1) ஒன்றாம் வகுப்பை படித்து முடித்தவர்கள் தமிழ் பள்ளியில் இரண்டாம் வகுப்பில் சேரமுடியாது என்று கூறியதோடு என்னை முதல் வகுப்பில் சேர்த்துக்கொண்டார்கள் அப்போது எனக்கு ஆசிரியர்களாக இருந்த (1968)-காமாட்சி டீச்சர் மற்றும் பலராமன் சார், மிகச்சிறந்த ஆசிரியர்களான இவர்கள் தற்போது உயிருடன் இல்லை ஆனாலும் இவர்களின் பெயர் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறது…. சென்னைக்கு அருகே கூடுவாஞ்சேரி அரசு இடைநிலைப்பள்ளியில் (நான் படித்தபோது 1முதல் 5 வகுப்புகள் மட்டுமே) இன்றளவும் அவர்களின் பெயர்களை பறைசாற்றிக்கொண்டிருக்கிறது …… வெற்றிலை பாக்கு 2வாழைப்பழம் (2 பழங்களுக்கு மேல் வைக்க கூடாதாம்)அதோடு 4அனா-25பைசா தட்சிணை (பின் குறிப்பு:- தட்சிணை கூடாது என மறுக்கப்பட்டு திரும்பி வந்துவிட்டது. மேலும் இரண்டு வாழைப்பழத்தில் ஒன்றை தலைமை ஆசிரியர் என் கையில் தந்துவிட்டார்) இவைகள்தான் நான் பள்ளியில் சேரும்போது குரு தட்சிணையாக தந்தது இன்னமும் எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. (அம்மா எனக்கு மிட்டாய் வாங்க ஐந்து ஒரு பைசா நாணயமாக (5பைசா) தந்ததும் கூட ஞபகம் உள்ளது) என் கணக்கு படி ஐந்து பைசா என்றால் ஐந்து எண்ணிக்கை இருக்கவேண்டும் …இரண்டு பைசா மற்றும் அரையணா-3பைசா இவைகள் ஒரு பைசா என்பது என் கணக்கு….. வீட்டிலிருந்து பள்ளிக்கு நான்கு மையில் தூரம் அக்காவின் கையை பிடித்துக்கொண்டு நடந்தே சென்ற அந்த நாட்கள்….. இன்றைய நிலையில் அடுத்த தெருவிலிருக்கும் பள்ளிக்கு பேருந்தில் செல்லவேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது… இது ஓர் முன்னேற்றமா?.
HFCL-தாயாரிப்பின் நேர்காணல் பணி நிமித்தம் நான் அடிக்கடி செல்லும் இமாச்சல் “சிம்லாவின்” ஒரு பிரபல பெரிய ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இந்த பழைய சோறு எப்படி செய்வது என்பதை சொல்லிக்கொடுத்து செய்யச்சொல்லி சாப்பிட்ட ஒரே ஆள் நானாகத்தான் இருப்பேன் என் நினைக்கிறேன் “என் மனைவி இதுகுறித்து இன்றளவும் கேலி செய்துக்கொண்டிருப்பார்கள்) “பழைய சோறு” உண்டு அனுபவித்தவர்களுக்கு மட்டுமே அதன் அருமை தெரியும்.
என்னுடைய அப்பாவழி பாட்டி அவர்களின் வீட்டு திண்ணையில் இதுபோலவே அவர்களின் தோட்டத்தில் விளைந்த காய்களை பறித்து வைத்துவிடுவார்களாம், வேண்டுபவர்கள் அதை எடுத்துக்கொண்டு செல்லலாம். அதேபோல நான் வசிப்பது (1990முதல்)புது தில்லியில் என்பதால் எங்களது வாடிக்கயரான வீடு வீடாக செல்லும் காய் வண்டிக்காரரிடம் ஒவொரு மாதமும் வரும் அம்மாவசை அன்றும் 20 கிலோ வாழக்கைக்கு பணம் தந்து அதை அன்று முழுவதும் இலவசமாக பலருக்கு வழங்கவேண்டும் என்று கட்டளையிட்டதுண்டு .. தற்போது ப்ராஜெக்ட் வேலைநிமித்தம் பல இடங்களுக்கு செல்வதால் தொடர்ந்து செய்ய முடியாமல் போனது…. ஒரு மாமி என்னிடம் “ஏண்டாப்ப இப்போதெல்லாம் இலவச வாழக்காய் தருவதில்லை” என்று கோபித்துக்கொண்டார்….. பாட்டிக்கு ஆங்கில காய் வகைகள் பிடிக்காது (கோஸ், பீன்ஸ், கேரட், முள்ளங்கி நூகோல் போன்றவை) பின்னாளில்1912- தாதாவுக்கு ஊட்டி தாவரவியல் தோட்டத்தில் கார்டன் (botanical garden superintendent) இருந்தபோது அவருக்கு வரும் ஆங்கில காய்கறிகளை அப்படியே மாட்டுக்கு வைத்துவிடுவார்களாம். 1989கலீல் பாட்டி எங்களது தலைநகர் வாழ்க்கையை பார்த்து, காய்கறிகள் அரைகிலோ, ஒருகிலோ என்று வாங்கி குளிர் போட்டியில் வைத்து வாழ்வதைப்பார்த்த பாட்டி, எங்கல் காலத்தில் எப்படியெல்லாம் வாழ்ந்தொமடா என்று கண்ணீர்விட்டது… என் நினைவில் நின்றவை….
பாடல் -“அவா அவா ஆத்துக்குள்ள ஆயிரம் இருக்கு… தெரியாதோ நோக்கு தெரியாதோ”……. ” தெரியாது ஆனா தெரியும்” வாழ்க்கையில் இதை நன்கு புரிந்துக்கொண்டால் வேகமாக முன்னேறமுடியும், எனக்கு நேர்ந்த ஒரு அனுபவம் இது, LKG என்னும் பாலர் பள்ளியில் படிக்கும் என்னுடைய அக்காவின் மகனிடம் நான் கற்ற பாடம் தான் என்னுடைய வாழ்கையில் நான் வேகமாக முன்னேற எனக்கு உதவியது. சுமார் 25 வருடத்திற்கு முன்பு என் அக்காவின் மகன் என்னிடம் ஓடி வந்து காகிதத்தில் ஒட்டகம் செய்து தருமாறு கேட்கவே நான் பல யோசனைக்குப்பின், எனக்கு கப்பல், விமானம் போன்ற இன்னும் சில காகிதத்தில் செய்யத்தெரியும் ஆனால் ஒட்டகம் செய்ய தெரியாது என்றேன், அதற்க்கு அவன் “என்ன மாமா, இதுகூட தெரியலையே” என்று கூறி காகிதத்தின் ஒரு பகுதியை கிழித்து அதை நீண்ட உயர வடிவில் சுருட்டி இது தான் ஒட்டகத்தின் கழுத்து நீண்டு இருக்கும், பிறகு தலை மற்றும் கால், உடல்… என்று காகிதங்களை சுருட்டி ஒன்றன் பின் ஒன்றாக இணைத்து… ஒட்டகம் இதுதான் என்றான்..மிக எளிமையான இது எனக்கு தெரிந்தும் தெரியவில்லை என்றோமே. அன்று எடுத்த முடிவுதான் எதுவும் தெரியும் என்று சமாளிப்பது எப்படி என்று பழகிக்கொண்டேன், அது என் முன்னேற்றத்திற்கு மிகவும் உதவியது. பலருக்கு பலவிவரங்கள் தெரிந்திருக்கும் ஆனால் சரியான நேரத்தில் அதை பயன்படுத்திக்கொள்வது தெரியாது. உதாரணத்திற்கு வேலைவாய்ப்பின் நேர்காணலின் பொது கேட்கப்பட்ட சில கேள்விகள் “SIP பற்றி தெரியுமா அதில் அனுபவம் உள்ளத? ” அந்த நேரத்தில் பதில் சொல்லமுடியாமல் பிறகு இது எனக்கு நன்கு தெரியுமே சரியான நேரத்தில் அதை சொல்லாமல் தவறவிட்டுவிட்டோமே என வருந்துவது. இப்போது சொல்லுங்கள் இன்று இந்த “பதிவு” உங்களுக்கும் உபயோகமாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.
“நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி ஒன்று தெய்வத்தின் …”
இனிமையான பல நினைவுகளைக்கொண்ட ஓய்வுக்காலம், சிறிது ஏக்கமான இறுக்கத்தையும் தருகிறது என்பது எனது கருத்து. 2008-2009 கலீல் நேரம் கிடைக்கும்போதெல்லாம் இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையராக இருந்த GVG கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் பல நேரம் அவருடைய கிழக்கு டெல்லி உத்தரப்பிரதேச எல்லையில் அமைந்திருக்கும் அவருக்காக அவர் வாங்கிய இல்லத்தில் பேசிக் கொண்டிருப்போம், அவரும் அவரது மனைவி “அம்மையார்” அவர்களும் தெலுங்கில்தான் பேசிக்கொள்வார்கள். நானும் அம்மையார் அவர்களுடன் தெலுங்கிலும், GVG கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் தமிழிலும் பேசுவோம். அதிகமான மக்கள்தொகை கொண்ட ஒரு நாட்டின் தேர்தல் ஆணையராக பணியாற்றியதை பற்றி பெருமைப்படுவதாகவும் மேலும் அவருக்கு ஏற்ப்பட்ட இனிமையான அனுபவங்களைப்பற்றி பேசுவார், ஒரு தொகுதியில் 3500 க்கும் மேல் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு தேர்தல் சின்னம் ஒதுக்குவதற்காக அதிக சிரமப்பட்டதாக நினவுகூரினார், நாட்டின் பல முக்கிய பிரதமர்களுடன் பணியாற்றியது பற்றி அவரது அனுபவங்களை புகைப்படங்களுடன் கூடிய குறிப்புகளை வருடத்திற்கு ஒரு கோப்புக்கள் என்று வகைப்படுத்தி வைத்திருக்கிறார். முன்னாள் இந்திய ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் அவர்களுக்கு நூறாவது பிறந்தநாள் கொண்டாட வேண்டும் என்று மிகவும் விருப்பத்தோடு இருந்தார், அது முடியாமல் போன பொது மிகவும் வருந்தினார்(கண்கலங்கினார்). தற்போதும் தன்னைப்பற்றிய எந்த ஒரு செய்தியும் வெளிவரக்கூடாது என்பதை ஒரு கொள்கையாக கடைப்பிடிக்கிறார். மனதளவில் ஏக்கங்கள் இருந்தும் கொள்கையை இன்னும் விடாது பிடித்துக்கொண்டிருக்கிறார். அவரின் மனதிற்கு ஆறுதலாகவும் சந்தோசம் தரும் வகையில், அவரின் இருப்பிடத்திற்கு அருகாமையில் அமைந்த ஒரு சில பள்ளிகளின் விழாக்களுக்கும், கோவில் மற்றும் சில பொது நல சங்கங்களின் விழாக்களுக்கும் தலைமை ஏற்கும் சேவைக்கு அன்புக்கட்டளையாக அடம்பிடித்து அழைத்து சென்றிருக்கிறோம். http://youtu.be/3euUGyKp7_4